சர்வோதயா எக்ஸ்பிரஸில் வெஜ்பிடபிள் பிரியாணியில் எலி: பயணிகள் ஆத்திரம்
அகமதாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய ஆசிரியர் நிலேஷ் பட்டேலின் குடும்பத்தாருக்கு சர்வோதயா எக்ஸ்பிரஸில் வழங்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் எலி செத்துக் கிடந்தது.
குஜராத் மாநிலம் வல்சத் பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் பட்டேல். ஆசிரியர். அவரது மனைவி வீணா. நிலேஷ் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு சர்வோதயா எக்ஸ்பிரஸில் குஜராத்திற்கு திரும்பினார்.
ரயிலில் நிலேஷ் 3 வெஜிடபிள் பிரியாணி வாங்கினார். அவரும், அவர் மனைவியும் இரண்டு பொட்டலங்களை எடுத்துக் கொண்டனர். மகன்கள் இருவரும் ஒரு பொட்டலத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது இளைய மகன் மோனிக்(7) சாப்பாட்டில் ஸ்பூனை வைத்தபோது ஏதோ கருப்பாக ஒரு பெரிய பொருள் தட்டுப்பட்டுள்ளது.
இதையடுத்து நிலேஷ் அது என்ன என்று பார்த்தபோது பிரியாணியில் காய்கறிகளுடன் சேர்ந்து வெந்த நிலையில் எலி ஒன்று கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். செத்த எலியைப் பார்த்ததும் சக பயணிகள் ரயில் ஊழியர்களை தாக்க முயன்றனர். அப்போது வெயிட்டர் ஒருவர் மீதமிருந்த பிரியாணியை கீழே கொட்டினார். இதை பயணிகள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
இதையடுத்து அவர் இந்த விவகாரம் குறித்து ரயில்வே நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட கேன்டீன் மேனேஜர் யாருக்காவது புட் பாய்சனிங் ஏற்பட்டால் தான் பொறுப்பேற்தாக தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications