விஸ்வரூபம் பிரச்சினைக்கு அரசியல் காரணமில்லை... சட்டம் ஒழுங்குதான் காரணம்!- கமல் அண்ணன்
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம், என்று கமல்ஹாஸன் சார்பாக அவரது அண்ணன் சந்திரஹாஸன் இன்று தெரிவித்தார்.
விஸ்வரூபம் படத்தை இந்தியில் திரையிட மும்பை சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். எனவே அவருக்கு பதில் தொடர்ந்து மீடியாவில் பேசும் பொறுப்பை அவரது அண்ணனும் படத்தின் இணை தயாரிப்பாளருமான சந்திரஹாஸன் ஏற்றுள்ளார்.
இன்று காலை ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் (கடைசி பிரஸ் மீட் என்று கமல் அறிவித்த இடத்தில்) செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரஹாஸன், "விஸ்வரூபம் படம் உலகம் முழுவதும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தமிழகத்தில் இந்தப் படம் வெளியாக முடியாததற்கு அரசியல் காரணம் என்று நினைக்கவில்லை.
இந்தப் படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் அனைத்தும் நல்ல முறையில் நீங்கும் என்று தெரிகிறது.
கமல் இப்போது மும்பையில் உள்ளார். அங்கு படத்தை வெளியிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார்.












Click it and Unblock the Notifications