போலி முதலீடு: கத்காரியிடம் வருமான வரித்துறை 4 மணி நேரம் துருவித் துருவி விசாரணை
மும்பை: பூர்த்தி குழும நிறுவனங்களில் போலியாக முதலீடு செய்தது குறித்து முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் வருமான வரித்துறையினர் 4 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி பவர் மற்றும் ஷுகர் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்ததில் 30 நிறுவனங்கள் போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி அந்த போலி நிறுவனங்களுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள 11 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் சொன்ன முகவரியில் எந்த நிறுவனமும் இல்லை என்பது தெரிய வந்தது.
வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க கத்காரி இவ்வாறு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு குறித்த விசாரணைக்குஆஜராகுமாறு கத்காரிக்கு வருமான வரித்துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் நாக்பூரின் சதார் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கத்காரி நேற்று ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை இயக்குனர் கீதா ரவிச்சந்திரன் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.
ஆனால் தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், பூர்த்தி குழுமத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கத்காரி தெரிவித்துள்ளார். முன்னதாக கத்காரியின் பிரதிநிதிகள் வருமான வரித்துறையிடம் அவரது தனிப்பட்ட பணபரிவர்த்தனைகள், பூர்த்தி குழும முதலீடுகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 25 பக்க ஆவணத்தை சமர்பித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications