காழ்ப்புணர்ச்சியால் உயர்மட்ட பறக்கும் விரைவு சாலை திட்டத்தை முடக்கிய அதிமுக அரசு: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பறக்கும் விரைவு சாலை சென்னைத் துறைமுகத்தில் இருந்து தங்கு தடையற்ற சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதற்காக சென்னைத் துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை கூவம் ஆற்றின் ஒரு கரையோரமாக பறக்கும் விரைவுச் சாலையை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு 22.6.2007 அன்று கொள்கை அளவில் அனுமதி வழங்கியது.
பின்னர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக்கொண்டபடி, இந்த உயர்மட்ட பறக்கும் சாலையைச் சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும், கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் மேலும் அமைப்பதற்கு 7.3.2008 அன்று அனுமதி வழங்கி தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
2011-ம் ஆண்டு மார்ச் திங்களில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடருவதற்கான அனுமதியையும் வழங்கிவிட்டது. திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமான சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர் மட்டச்சாலை 1,815 கோடி ரூபாய் செலவிலே தொடங்கப்பட்டு அதிவேகமாக நடைபெற்று வந்ததை, அதிமுக ஆட்சியினர் பணியைத் தொடராதே என்று 2012ம் ஆண்டு மார்ச் திங்களில் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் முறையாக வழங்கப்பட்டு, பிரதமரே வந்து பணிகளைத் தொடங்கி வைத்த திட்டம் அது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரை மணி நேரத்தில் செல்லுகின்ற பயணம் ஐந்தே நிமிடங்களில் முடிவுறும்; போக்குவரத்து சுலபமடையும். ஏற்கனவே தமிழக அரசே முழுமையாக ஆய்ந்து அனுமதி கொடுத்து தொடங்கப்பட்ட திட்டம்.
இந்த விவரங்களையெல்லாம் மத்திய அரசின் துறைச் செயலாளரே தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு விரிவாக எழுதியதோடு, நேரிலும் வந்து விளக்கியிருக்கிறார். மத்திய அமைச்சரவையில் செயலாளர் டி.ஏ.கே.நாயர் பிரதமரின் அனுமதியோடு சென்னை வந்து முதல்வர்ஜெயலலிதாவிடம் இந்தத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கியிருக்கிறார்.
அதற்குப் பிறகும் சென்னைத் துறைமுகம்- மதுரவாயல் உயர் மட்ட விரைவுச் சாலைப் பணியினையும் அதிமுக அரசு முடக்கிப் போட்டுள்ளது. சுமார் ஓராண்டு காலமாக இந்தத் திட்டத்திற்கு அதிமுக அரசு நியாயமான அடிப்படை எதுவுமின்றி, முட்டுக்கட்டை போட்ட காரணத்தினால் திட்ட மதிப்பீடும் அதிகமாகி, பொதுமக்களின் வரிப்பணம் விரயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பணிகள் நிறைவேற்றப்பட்டு வந்த இடத்தில் எல்லாம் புல், பூண்டுகள் முளைத்துவிட்டன. இந்த முக்கியமான திட்டத்திற்கு அதிமுக அரசு தடங்கலாக இருந்ததின் காரணமாக மக்களிடையே எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகமானதால் தமிழக அரசு தன் முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தைப் பொறுத்தவரை; தமிழக அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக எதுவும் செய்யப்படவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் அளவிற்கு செலவுகள் செய்யப்பட்டு; இருபது சதவீதப் பணிகள் முற்றுப் பெற்றுள்ளன.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதுபோன்ற பல திட்டங்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்களின் வரிப்பணம்தான் விரயமாக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications