தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: ஆளுநர் ரோசய்யா உரை

2013ம் ஆண்டு பிறந்த பிறகு இன்று தான் தமிழக சட்டசபை முதல் முறையாக கூடுகிறது. இன்று காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தின்போது பல புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடவிருக்கிறது. அதிலும் குறிப்பாக மழை பொய்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சட்டசபை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஒரு வார காலம் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.
இன்று காலை ஆளுநர் உரையைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அவரது உரையின் நகல் புத்தகம் அளிக்கப்படும். அதன் பிறகு வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு சட்டசபை கூடும். கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தின்போது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். கூட்டம் முடியும் நாள் அன்று முதல்வர் ஜெயலலிதா உரை நிகழ்த்துவார். பின்னர் இந்த கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும். அடுத்ததாக தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications