திமுக உட்கட்சி மோதலில் பொட்டு சுரேஷ் கொலை? போலீஸ் வளையத்தில்மன்னன்! அட்டாக் பாண்டி எஸ்கேப்!!

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தென் தமிழகத்தை ஆட்டுவித்தவர்களில் பொட்டு சுரேஷும் ஒருவர். இவர் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீடு அருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு காரணம் உட்கட்சி மோதலா? அல்லது காண்டிராக்ட் தொழிலில் ஏற்பட்ட போட்டியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மதுரை மேலமாசிவீதி சரவணனிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் மதுரை முன்னாள் துணைமேயரான திமுகவின் பி.எம். மன்னனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொட்டு சுரேஷைப் போல் மதுரையில் வலம் வந்து கொண்டிருந்த திமுகவைச் சேர்ந்த அட்டாக் பாண்டி மீதும் போலீசார் பார்வை திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அட்டாக் பாண்டி எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் அவரது தலைமறைவு தொடர்பாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பொட்டு சுரேஷ் உடலுக்கு திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பொன்.முத்துராமலிங்கம், தளபதி, தேனி மூக்கையா, ஜெயராமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மு.க.அழகிரியின் ஆதரவாளர்களும், பொட்டு சுரேஷுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்த முபாரக் மந்திரி, மருது, இப்ராஹிம் சேட்டு, போஸ் முத்தையா உள்ளிட்டோர் வரவில்லை. இதேபோல் பொட்டு சுரேஷ் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்காத திமுகவினர் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications