2014 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்... சொல்கிறார் ல.தி.மு.க. டி.ராஜேந்தர்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் ல.தி.மு.க. சார்பில் டி.ராஜேந்தர் போட்டியிட்டார். கள்ளக்குறிச்சியில் தங்கியிருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 24.4.2009-ந் தேதி அன்று சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இரவு 10 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் விஜய டி.ராஜேந்தரை, வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் விஜய டி.ராஜேந்தர் கொடுத்த புகாரின்பேரில் ஒன்றிய செயலாளர் சின்னசாமி, குமார், உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் விரைவு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. இதன் விசாரணை தொடர்பாக நேற்று காலை கள்ளக்குறிச்சி வந்த டி.ராஜேந்தர், மாஜிஸ்திரேட்டு ஜெகதீசன் முன்னிலையில் ஆஜராகி இந்த வழக்கில் சமாதானமாகி வழக்கை முடித்துக்கொள்வதாக கூறினார்.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கள்ளக்குறிச்சியில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது எனக்கு எதிராக சிலர் நடந்துகொண்டனர். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். எனவே மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் அந்த வழக்கை சமாதானம் செய்து முடித்துக்கொண்டேன்.
இன்றைக்கு மத்தியில் நடைபெறுகிற காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. மக்கள் விரோதபோக்குடன் டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. உலக வரலாற்றில் பல முறை பெட்ரோல், டீசல் உயர்த்தியது இந்த ஆட்சியில் மட்டும்தான் இருக்கும்.
இதற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எப்போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் லட்சிய தி.மு.க. போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்படக்கூடிய அணியில் ல.தி.மு.க. இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications