ஈராக்கில் போலீஸ் தலைமையகம் மீது குண்டுத் தாக்குதல்: 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கிர்குக்: ஈராக்கின் கிர்குக் பகுதியில் போலீஸ் தலைமையகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிர்குக் நகரில் போலீஸ் தலைமையகத்தை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர். அப்போது வெடிகுண்டுகள் நிரம்பிய காருடன் வந்த தீவிரவாதி அந்த கட்டிடத்தின் மீது மோதி வெடித்தான்.
இதில் அப்பகுதியில் நடமாடிய 30 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயமடைந்தனர். அந்த சாலை முழுவதுமே சடலங்கள் சிதறிக் கிடந்தன. இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் மற்றும் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications