மைனரின் வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு
டெல்லி: இளஞ்சிறார் குற்ற தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கமல்குமார் பாண்டே, சுகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலனை செய்தது. அப்போது மனுதாரர்களான வழக்கறிஞர்கள் இருவரும் ஆஜராகி கூறுகையில்,
இளஞ்சிறார் குற்றத் தடுப்புச் சட்டத்தின் 2 (கே), 10, 17 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறாரின் வயது வரம்பும், இந்திய தண்டனை சட்டம் 82, 83 ஆகிய பிரிவுகளில் குறிப்பட்டிருக்கும் வயது வரம்பும் முரண்பாடாக உள்ளது.
இதில் இந்திய தண்டனை சட்டம் 82வது பிரிவில், 7 வயதுக்குட்பட்ட சிறார்களின் தவற்றை குற்றமாகக் கருதக் கூடாது என்று உள்ளது. ஆனால் 83வது பிரிவிலோ, 7 வயதுக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே புரியாத நிலையில் அவர்கள் தவற்றை குற்றமாக கருதக் கூடாது என்று உள்ளது.
இளஞ்சிறார் தடுப்புச் சட்டத்தில் என்னவென்றால் 18 வயது வரை உள்ளவர்களை சிறுவர்களாக கருத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளை போக்க சிறாரின் வயது வரம்பு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றனர். அதை அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி ஆட்சேபித்தார்.
வாகனவதி கூறுகையில், மனுதாரர்கள் சட்டத்திற்கே கேள்வி விடுக்க முயற்சி செய்கிறார்கள். அதை அனுமதிக்க கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு இச்சட்டம் குறித்து மாநில அரசுகளின் கருத்தை கேட்க வேண்டும் என்றார். ஆனால் நீதிபதிகள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து மாநில அரசுகள், அரசு சாரா நிறுவனங்களின் கருத்தை கேட்டறிய விரும்பவில்லை. மனுதாரர்கள் ஒன்றும் சட்டத்தை எதிர்க்கவில்லை. அதில் உள்ள சிறார் வயது வரம்பில் முரண்பாடாக இருப்பதை தெளிவுபடுத்தவே கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சிறாரின் வயது வரம்பு குறித்து ஆய்வு செய்வது என்று நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த மனு குறித்த விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் உதவி செய்ய வேண்டும். இந்த மனு குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீது வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவியை கற்பழித்த 6 பேரில் ஒருவன் 17 வயது மைனர். அவன் மைனர் என்பதால் பிறரைப் போன்று தண்டனை பெறாமல் தப்பித்துவிடும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தான் மைனருக்கான வயது வரம்பை குறைக்கக் கோரி பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாகத் தான் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications