உடல் நலக்குறைவு: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்த டெசோ அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பிறகு அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். சிறுநீர் வெளியேறுவது தொடர்பான பிரச்சனை இருப்பதால் அவர் சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி தான் தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications