பசுமாட்டை கடித்த புலி: விசாரணைக்கு சென்ற தாசில்தாரையும் கடித்து குதறியது!
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பசுமாடுகளை தாக்கிய புலி பற்றி விசாரிக்கச் சென்ற தாசில்தார் குழுவினரை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக, கேரள எல்லையில் உள்ள மூலங்காடு பகுதியை சேர்ந்த தம்பி, சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான 2 பசுக்களை புலி அடித்து கொன்றது. இதுகுறித்து விசாரணை நடத்த பத்தேரி தாசில்தார் விஜயன் (53), பள்ளி ஆசிரியர் கிருஷ்ணகுமார் (53), மூலங்காவு பேரூராட்சி தலைவர் ஐயுப்(44), வன ஊழியர் ராஜன் (34), பள்ளி மாணவிபினா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், ஞாயிறன்று மாலை மூலங்காடு பகுதிக்கு சென்றனர்.
கிராம மக்களிடம் புலியின் நடமாட்டம் குறித்து இக்குழுவினர் விசாரித்து கொண்டிருந்தபோது, புதர் ஒன்றில் மறைந்திருந்த புலி அவர்கள் மீது திடீரென பாய்ந்தது. புலியை கண்ட பொதுமக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். தாசில்தார் விஜயனை புலி கடித்து குதறியது. அவரை காப்பாற்ற சென்ற ஆசிரியர் கிருஷ்ணகுமார் மீது பாய்ந்து கடித்ததோடு மாணவி, வன ஊழியர், பேரூராட்சி தலைவர் ஆகிய 5 பேரையும் நகத்தால் கீறியது. இதனையடுத்து பொதுமக்கள் தீப்பந்தங்களுடன் விரட்டவே புலி மீண்டும் வனத்தில் ஓடி மறைந்தது.
படுகாயமடைந்த விஜயன், கிருஷ்ண குமார் ஆகியோரை வனத்துறையினர் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயமடைந்த 3 பேரும் பத்தேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர், கால்நடைமருத்துவர் அருண்சக்காரியா தலைமையில் காட்டிற்குள் மறைந்திருந்த புலியை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அதை திருச்சூரில் உள்ள வன உயிரின பூங்காவுக்கு கொண்டு சென்றனர். தாசில்தாரை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்பு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமரம் பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 12 வயது பெண் புலியை வனத்துறையினர் பிடித்து முத்தங்கா சரணாலயத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications