திருமணமான பெண்ணை குழந்தையுடன் அபகரித்துச் சென்ற அதிமுக கவுன்சிலர்
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் குழந்தையுடன் இளம்பெண்ணை கடத்திய அதிமுக கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி மேலரத வீதியை சேர்ந்தவர் திருமலை முருகன். இவரது மனைவி கெங்காபரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வயதில் மகன் உள்ளார்.
புளியங்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்த ராஜவேல் பாண்டியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜவேல்பாண்டியனை அவரது மனைவி பிரி்ந்து சென்றார். அப்போது தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார்.
இதனால் ராஜவேல்பாண்டியன் தனது 3வது மகளுடன் புளியங்குடியில் வசித்து வந்தார். தற்போது இவர் புளியங்குடி நகராட்சி 7வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரை ராஜகோபால் பாண்டியன் மகள் காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே திருமலை முருகன் வெளி நாடு சென்றார். அவரை வழியனுப்புவதற்காக கெங்காபரமேஸ்வரி விமான நிலையம் சென்றார். அப்போது அவருக்கும் அங்கு வந்த ராஜவேல்பாண்டியனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
ஊருக்கு வந்த அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதில இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரு்லை முருகன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது மனைவிக்கும், ராஜவேல்பாண்டியனுக்கும் உள்ள தொடர்பை கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் பிப் 1ம் தேதியன்று கெங்காபரமேஸ்வரி தனது மகனுடன் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருமலை முருகன் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். அதில் அதிமுக கவுன்சிலர் ராஜவேல்பாண்டியன் தனது மனைவியையும், குழந்தைகளையும் கடத்தி சென்று இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிவு செய்து ராஜவேல்பாண்டியன் மற்றும் கெங்காபரமேஸ்வரியை தேடி வருகிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications