சாலமோன் தீவு அருகே கடலில் பயங்கர நிலநடுக்கம்: ஆஸி, இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமோன் தீவுகளில் இன்று அதிகாலை 6.45 மணிக்கு (இந்திய நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.
பசிபிக் கடலில் நிலத்துக்கு அடியே 5.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதையடுத்து சாலமோன் தீவுகள், வனாது, நௌரு, பாபுவா நியூ கினியா, பிஜி, வேல்ஸ் மற்றும் ஃப்யூடுனா, கிரிபாடி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் தென் பசிபிக் கடலோரம் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சான்டா க்ரூஸ் தீவுகளில் உள்ள லடா வார்ப் பகுதியில் 3 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்துள்ளது. மேலும் 2 கிராமங்களிலும் சிறிய அளவில் சுனாமி அலைகள் எழுந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 90 செ.மீ. உயரம் கொண்ட சிறிய அளவு சுனாமி சாலமோன் தீவை தாக்கியதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர சான்டா க்ரூஸ் தீவிகளின் மேற்கு பகுதியை 4 அடி உயர சுனாமி பேரலைகள் தாக்கயதில் 50 வீடுகள் சேதமடைந்தன. பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேடான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சாலமோன் தீவுகள் பகுதியில் அவ்வப்போது மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு சாலமோன் தீவுகளில் 8.1 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்பட்டது. இதில் 52 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். 13 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications