திமுகவுடன் விஜயகாந்த் நெருங்குவது பொறுக்குவதில்லையா?: கருணாநிதி கேள்வி

திமுக எம்.பியான சிவா இல்ல திருமண விழாவுக்காக திருச்சி சென்ற கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவைப் போல் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறாது. இங்குதானே நானே எல்லாம் என்ற ஆட்சி நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வருமா என்று எனக்குத் தெரியாது. முலாயம்சிங்கின் கருத்து வெறும் யூகம்தான் எனக்கு யூகமும் வியூகமும் இல்லை.
ராஜபக்சேயின் வருகை குறித்து மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.
திருச்சியில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுகவுடன் நெருங்கி வருகிறாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் திமுகவுடன் நெருங்குவது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? என்றார். மேலும் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியில் தம்மை விஜயகாந்த் சந்திக்க இருப்பதாக கூறப்படுவது தவறானது என்றார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி பிரதமரை சந்தித்துதங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவும் இல்லையே என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் "ஆல் பார்ட்டியாவது...? ஆள் இல்லாத பார்ட்டியாவது....?'' எல்லாம் நானே என்கிற ஆட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்றார் கருணாநிதி.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications