9 வயது மெக்சிகோ சிறுமியை அம்மாவாக்கிய 17 வயது சிறுவன் தலைமறைவு!
மெக்சிக்கோ: மெக்சிகோவில் 17 வயது வாலிபனால் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சிறுமியை தாயாக்கி விட்டு தலைமறைமான 17 வயது வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் தனது எட்டாவது வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த சிறுமி கர்ப்பமானார். அவளை தாயாக்கிய அந்த வாலிபன் தலைமறைவாகிவிட்டான். தற்போது அந்த சிறுமிக்கு கடந்த மாதம் 27ம் தேதி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தை 2.7 கிலோ கிராம் எடை இருந்தது. பிரசவத்துக்கு பின்னர் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பினர். எனினும், தாயின் வயது கருதி தொடர்ந்து அவரை தொடர்ந்து கண்காணிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு ஓடிப்போன 17 வயது வாலிபரை மெக்சிகோ போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications