விஸ்வரூபம் சிடி வேணுமா?.. மார்க்கெட்டில் நின்று கூவிக் கூவி விற்றதால் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: விஸ்வரூபம் பட திருட்டு சிடியை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் நின்று ஒரு நபர் கூவிக் கூவி விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே பையில் வைதது ஒருவர் விஸ்வரூபம் சிடியை கூவி கூவி விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாருக்குத் தகவல் போனது.
இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கேடிசி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பதும் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றுவதும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 22 விஸ்வரூபம் சிடிக்கள் மற்றும் கண்ணா லட்டு திங்க ஆசையா, டேவிட் உள்ளிட்ட 35 புதுப்பட சிடிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செல்வராஜும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications