மீண்டும் அரவையைத் தொடங்கின பாவூர்சத்திரம் அரிசி ஆலைகள்

பாவூர்சத்திரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு அரவையாகும் அரிசி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதே போல் வடமாவட்டங்களில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதால் நெல் மகசூல் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் நெல் தட்டுபாடு ஏற்பட்டு அரிசி ஆலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விழுப்புரம், செஞ்சி, பட்டுகோட்டை, மதுரை போன்ற பகுதிகளில் நெல் மகசூல் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளம், பகுதிக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. பாவூர்சத்திரத்திற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூடைகள் வரை லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அரிசிஆலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளதால் வடமாவட்டங்களில் இருந்து நெல் வரத்து இருந்தால் மட்டுமே ஆலைகள் முழுமையாக இயங்க முடியும் என்றும் தற்போது மீண்டும் மின்தடை அதிகரித்துள்ள நிலையில் ஆலைகளின் இயக்கம் பாதிக்கப்படுகிறது என நெல் வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications