காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் திடீர் உத்தரவு

தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 9 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை பிப்ரவரி 20-ந் தேதிக்குள் அரசிதழில் வெளியிடவும் ஆணை பிறப்பித்திருந்தது.
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடவில்லை. மேலும் கர்நாடகா அரசு நேற்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடவும் இது படிப்படியாக 8 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த நீர் எப்போது திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலிக்கக் கோரும் சீராய்வு மனுவை நாளை மறுநாள் தாக்கல் செய்யப் போவதாகவும் ஷெட்டர் கூறியுள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications