For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூர்கேலா கல்லூரியில் இந்திய - ஆப்கானிஸ்தான் மாணவர்கள் திடீர் மோதல்

Google Oneindia Tamil News

ரூர்கேலா: ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இந்திய, ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவர்களிடையே கடும் மோதல் மூண்டது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

ரூர்கேலாவில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கழகம் என்ற தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு நாட்டு மாணவர்களும் படிக்கிறார்கள்.

அங்கு படிக்கும் இந்திய மாணவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவர்களுக்கும் இடையே கலாச்சார விழா தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இது பெரும் கைகலப்பாக மாறியது.

ஆப்கானிஸ்தான் மாணவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், இந்திய மாணவர்களை அவதூறாகப் பேசியதாகவும், இதனால்தான் மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலில் 3 ஆப்கானிஸ்தான் மாணவர்கள் உள்பட 5 மாணவர்கள் காயமடைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
At least five students, including three from Afghanistan, were injured in a clash between students at National Institute of Technology (NIT), Rourkela during the annual cultural extravaganza, police said. Though the cause of the incident was not exactly ascertained so far, sources said Afghan students, allegedly in an inebriated state, had hurled highly objectionable words at Indian students leading to a clash between two groups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X