8வது வாட்டி மணந்த 26 வயது இளைஞர்.. 7 பேருக்கும் அல்வா கொடுத்து விட்டு!
ஷாடோல், மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் ஒரு கல்யாண ராமன் 8வது முறையா திருமணம் செய்துள்ளார். இதற்கு முன்பு திருமணம் செய்த 7 பேரையும் அவர் கைவிட்டு விட்டார். அவரது 6வது மனைவி தேவகி பய் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் என்ற ஊரைச் சேர்ந்தவர் உமேந்திர பிரசாத் மெஹ்ரா. இவருக்கு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் இது முதல் திருமணமல்ல, மாறாக 8வது திருமணமாகும்.
இது அவரது 6வது மனைவி தேவகி மூலம்தான் வெளியே தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் தேவகி. மேலும் மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினரான வந்தனா மாண்டவி என்பவரிடமும் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்துத் தேவகி கூறுகையில், என்னை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார் உமேந்திரா. ஒருவருடத்திற்குமுன்பு என்னை விட்டுப் பிரிந்தார். அதன் பிறகு அவரைப் பற்றி நான் விசாரித்தபோதுதான் அவர் ஏற்கனவே 5 பேரை மணந்து பிரிந்தது தெரிய வந்து அதிர்ந்தேன். இப்போது என்னையும் விட்டுப் பிரிந்து, மேலும் ஒருவரை மணந்து, மறுபடியும் 8வதாக ஒருவரையும் மணந்து மோசடி செய்துள்ளார் என்றார்.
உமேந்திரா எப்போது இந்த திருமண லீலைகளை முடிப்பாரோ... போலீஸ் கையில்தான் இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications