லண்டனில் வீட்டுக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையின் விரலை கடித்து துண்டாக்கிய நரி
லண்டன்: லண்டனில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த நரி பிறந்து 1 மாதமே ஆன ஆண் குழந்தையின் விரலை கடித்து எடுத்ததுள்ளது.
தென்கிழக்கு லண்டனில் உள்ள ப்ராம்லீயைச் சேர்ந்தவர் பால் டோலன். அவரது லிவ் இன் பார்ட்னர் ஹேலீ காவ்லீ(28). ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான அவர் கடந்த 4 வாரங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு டென்னி டோலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹேலீ குழந்தையை ஹாலில் படுக்க வைத்துவிட்டு வேலை பார்த்துள்ளார்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த நரி குழந்தையை கடித்துக் குதறியது. மேலும் குழந்தையின் இடது கையில் ஒரு விரலைக் கடித்து துண்டித்தது. இது தவிர குழந்தையை இழுத்துக் கொண்டு செல்லவும் முயன்றது. அப்போது குழந்தையின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த ஹேலீ நரியை எட்டி உதைத்தார். இதையடுத்து நரி குழந்தையை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது.
ஹால் முழுவதும் ரத்தமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஹேலீ. உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்து ஒட்டினர். குழந்தையின் கன்னத்தில் தையல் போடப்பட்டது. மேலும் தலை மற்றும் முகத்தில் உள்ள காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
மருத்துவனையில் உள்ள குழந்தை தற்போது உடல் நலம் தேறி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications