2ஜி வழக்கில் புதிய பரபரப்பு: யுனிடெக் 'எம்.டி'.யுடன் ரகசிய உரையாடல் நடத்திய சிபிஐ வக்கீல் நீக்கம்!
டெல்லி: நாட்டை உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் புதிய பரபரப்பாக குற்றம்சாட்டப்பட்ட யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவுக்கு சாதகமாக செயல்பட்ட சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே.சிங் நீக்கப்பட்டிருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்று யுனிடெக். இந்த யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவுக்கு ஆதரவாக ஆ.ராசா செயல்பட்டார் என்றுதான் குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்நிலையில் சஞ்சய் சந்திராவுடன் சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே.சிங் ரகசியமாக உரையாடல் நடத்தியது அம்பலமாகி இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த உரையாடல் நடைபெற்றிருக்கிறது. இதில் எப்படியெல்லாம் சிபிஐ-ன் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங். விளக்கியிருக்கிறார்.
இந்த உரையாடல் டேப் வெளியானதைத் தொடர்ந்து சிபிஐ நிர்வாகம் ஏ.கே.சிங்கை நீக்கியிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த, இந்த வழக்கில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவரின் தவறான செயல்பாட்டால், சி.பி.ஐ.யின் நேர்மைக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.
ஆனால் யுனிடெக் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநரை பார்லிமெண்ட் கூட்டுக் குழு விசாரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
யுனிடெக் பங்குகள் சரிவு
இந்த விவகாரத்தால் பங்குச் சந்தையில் யுனிடெக்கின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இன்று காலை மும்பை பங்குச் சந்தை தொடங்கிய போது யுனிடெக்கின் பங்குகள் 20% சரிந்து இருந்தது. ஒரு பங்கின் விலை ரூ28.05 ஆக சரிந்து இருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications