உடலை கொடுங்கள்… அப்சல் குருவின் உறவினர்கள் வேண்டுகோள்
ஸ்ரீ நகர்: தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல்குரு கடந்த சனிக்கிழமையன்று தூக்கிலிடப்பட்டான்.
அப்சல் குருவின் தூக்கு பற்றி சிறை நிர்வாகம் அனுப்பிய கடிதம் அவரது மனைவிக்கு நேற்றுதான் சென்று சேர்ந்தது. இது அவரது குடும்பத்தினரின் வேதனையை மேலும் அதிகரித்துள்ளது. அவரது மரண தண்டனையை வைத்து சில தலைவர்கள் அரசியல் நடத்தி வருகின்றனர். வர் தூக்கிலிடப் பட்டது சரியா-தவறா என்பது பற்றி நாங்கள் பேசவில்லை." என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அப்சல் குரு, திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டு பின்னர் சிறை வளாகத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. அவரது உடல் வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று உள்துறை மந்திரி ஷிண்டே கூறியிருந்தார். இந்நிலையில், அப்சல் குருவின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் அவரது குடும்பத்தினர் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக என்று அவரது உறவினர் முகமது யாசின் கூறுகையில், ‘எங்களுக்கு வேறு எந்த கோரிக்கையும் இல்லை. ஆனாலும் திகார் சிறை அதிகாரிகள் மற்றும் பாரமுல்லா துணை கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம்.
மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அரசிடம் இருந்து பதில் வந்தால் நாங்கள் எங்கள் சொந்த செலவில் டெல்லி செல்வோம். அரசிடம் இருந்து எந்த உதவியும் தேவையில்லை. அப்சல் குருவின் உடலை மட்டும் அவர்கள் தந்தால் போதும் என்று கூறியுள்ளனர்.
எங்கள் பகுதியில் முறைப்படி உடலை அடக்கம் செய்ய விரும்புகிறோம். அவரது மரண தண்டனையை வைத்து சில தலைவர்கள் அரசியல் நடத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் இதை அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும் என்றார்.
கல்லறையில் தொழுகை
இதனிடையே, திகார் சிறையில் அப்சல் குருவின் கல்லறையில் அவரது குடும்பத்தினர் ஜனசா தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். அப்சல் குருவின் உறவினர்கள் உடனடியாக இங்கு வந்து தொழுகை நடத்த விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சிறையில் அப்சல் குரு பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது உடமைகள் அனைத்தும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
இதையடுத்து, அப்சல் குருவின் கல்லறையில் அவரது குடும்பத்தினர் தொழுகை நடத்துவதற்கான சாத்தியமான தேதி பற்றி திகார் சிறை அதிகாரிகள் விரைவில் முடிவு செய்ய உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications