ஆசிட் வீசியவனை ஆசிட் ஊற்றியே கொல்ல வேண்டும்: வினோதியின் தந்தை
Subscribe to Oneindia Tamil

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வினோதியின் தந்தை ஜெயபால், என் மகள் மீது ஆசிட் ஊற்றிய சுரேஷ் மீதும் ஆசிட் ஊற்றி தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தூக்குத் தண்டனையெல்லாம் விதிக்கக் கூடாது. என் மகள் 3 மாத காலம் அவதிப்பட்டு உயிரிழந்திருக்கிறாள். இதேபோல் ஆசிட் ஊற்றியவனும் இந்தக் கொடுமையை அனுபவித்துத்தான் சாகனும்.. அவன் மீது ஆசிட் ஊற்றியே கொலை செய்ய வேண்டும் என்றார்.
வினோதியின் தாய்மாமா கூறுகையில், எத்தனையோ கோடி தமிழர்களின் பிரார்த்தனை வீணாகிப் போய்விட்டது.. பொதுமக்கள் கொடுத்த நிதி மூலம்தான் வினோதிக்கு சிகிச்சையே செய்தோம். ஆனால் இன்று எங்கள் பிள்ளையை நாங்கள் இழந்து நிற்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications