நெப்போலியனுக்கு நெஞ்சுவலி இல்லை; கழுத்து எலும்பு தேய்மானம்
Subscribe to Oneindia Tamil

மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று காலை நெல்லை வந்தார். அப்போது அவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு கேலக்ஸி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
உடனடியாக பாப்புலர் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் கழுத்து எலும்பு தேய்வு ஏற்பட்டு அதன் காரணமாக தான் தீடிர் மயக்கம் மற்றும் அதிகவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் அவர் உடனே வீடு திரும்பலாம் என்றும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
முன்னதாக நெப்போலியன் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின.












Click it and Unblock the Notifications