மக்களின் அன்பிற்கு வேறேதும் ஈடில்லை.. துபாய் முப்பெரும் விழாவில் ஸ்டாலின்
துபாய்: துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் கடந்த 9ம் தேதி மாலை துபாய் இந்தியன் பள்ளி, சேக் ரசீத் உள்ளரங்கத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இவ்விழாவில் திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி, மதுரை மாநகர் தி.மு.க மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, நாகை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், குடந்தை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மற்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமீரக தேசிய கீதத்துடன் துவங்கிய நிகழ்வில், பிரசித்தம் குழுவினரின் நடனங்கள் மற்றும் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த கரகாட்ட சுரேஷின் கரகாட்டமும் சிறப்பாக நடைபெற்றது.
விருந்தினர்களின் சிற்றுரைகளைத் தொடர்ந்து, பேசிய திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவை ஏற்பாடு செய்த அமீரகத் தமிழர்கள் அமைப்பை பாராட்டினார்.
தொடர்ந்து, சிறப்புரை நல்கிய மு.க.ஸ்டாலின், மிசா சம்பந்தமான நினைவுகளை தன் உருக்கமான உரையின் மூலம் பகிர்ந்து கொண்டார். தனக்கு எத்தனை பெரிய பதவிகள் கிடைத்தாலும், மக்களின் அன்பிற்கு வேறேதும் ஈடில்லை என்ற ஸ்டாலின், தமிழின் பெருமைகளை திமுக தலைவர் கருணாநிதியின் அடுக்கு மொழியில் பேசி, அரங்கத்தை அதிரச் செய்தார்.
நிகழ்வின் இறுதிகட்டமாக, ஆடுதுறை பன்னீர் செல்வம் குழுவினரின் பாட்டுமன்றம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் அமீரகத் தமிழ் அமைப்பின் சார்பில் மூர்த்தி வரவேற்புரை நல்க, இவ்விழாவினை தொலைக்காட்சி புகழ் தேவகோட்டை இராமநாதன் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை அமீரகத்தமிழ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அமுதரசன் தலைமையிலான குழு சிறப்பாக செய்திருந்தது. நிகழ்வின் இறுதியில் அமுதரசன் நன்றியுரையாற்றினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications