ஆஸி்: விக்டோரியா கோவிலில் மார்ச் 16-29 வரை சிவன் மகோற்சவம்
Subscribe to Oneindia Tamil
விக்டோரியா: விக்டோரியாவில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் வரும் மார்ச் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிவன் மகோற்சவம் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிவன் மகோற்சவம் நடைபெறுகிறது. மகோற்சவ விழா மார்ச் 16ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்குகிறது. இதையடுத்து 18ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு 26ம் தேதி ரதோற்சவம், 27ம் தேதி தீர்த்த உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன. 27ம் தேதி மாலை கொடி இறக்கம் நடைபெறும்.
மார்ச் 28ல் பூங்காவன திருவிழாவும் மறுநாள் வைரவர்மடையும் நடைபெறுகின்றன. வைரவர்மடையுடன் மகோற்சவம் நிறைவுபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications