டெல்லியில் சகோதரரின் மனைவியை பழிவாங்க 18 மாத குழந்தையை சாக்கடையில் வீசிக் கொன்ற நபர்
டெல்லி: சகோதரரின் மனைவியை பழிவாங்க அவரது 18 மாத குழந்தையை சாக்கடையில் வீசிக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள ஜகத்பூரியில் செல்போன் கடை வைத்திருப்பவர் சர்தஜ். அவர் குரேஜி பகுதியில் வசித்து வருகிறார். அவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஜனவரி 23ம் தேதி என் தாய் எனது 18 மாத மகன் ஜயிதை பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றார். அதன் பிறகு எனது தந்தை போன் செய்து குழந்தையை எனது சகோதரர் முகமது ஆபித் கொண்டு வந்து கொடுத்தாரா என்று கேட்டார். ஆனால் குழந்தையை ஆபித் இங்கு கொண்டு வரவில்லை மாறாக கடத்திச் சென்றார் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த 28ம் தேதி ஆபிதை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆபித் கூறுகையில், சகோதரரின் மனைவி என்னைப் பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் கொடுத்திருந்தார். அவரை பழிவாங்கவே குழந்தை ஜயிதை காசிபூரில் உள்ள சாக்கடையில் வீசிக் கொன்றேன் என்றார்.
போலீசார் அவரை காசிபூர் அழைத்துச் சென்றபோது குழந்தையை வீசிய இடத்தை அவர் அடையாளம் காட்டினார். ஆனால் இதுவரை குழந்தையின் உடல் கிடைக்கவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications