எல்லாத்துக்கும் ஹார்மோன்தான் காரணம்.. டாக்டர் சொல்வதைக் கேளுங்க..

தென்சென்னை மேற்கு மாவட்ட பாமக சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தியாகராயநகரில் நடந்தது. அதில் கலந்துகொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
காதல் கலப்பு திருமணத்தை நான் எதிர்ப்பதாக தவறான பிரசாரம் செய்கிறார்கள். 14, 15 வயதில் சீரழிவதற்கு பெயர் காதலா? காமவெறியில் உணர்வுகளை தூண்டி சீரழிகிறார்கள்.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யும்படி கர்நாடக கோர்ட்டே தீர்ப்பு வழங்கி உள்ளது. 21 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளால் தனக்கு துணையாக வருபவன் தனக்கு ஏற்றவன்தானா? என்று பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது.
ஹார்மோன் கோளாறால் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆண்கள் வலையில் விழுந்து விடுகிறார்கள். அதன்பிறகுதான் பாதிக்கபடுகிறார்கள். தன் மகளுக்கு ஏற்ற துணையை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். காதல் திருமணம் செய்யும் போது பெற்றோர் ஒப்பதல் அவசியம். இல்லாவிட்டால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் பக்தவத்சலா, கோவிந்த ராஜுலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
14-ந் தேதி காதலர் தினம் என்கிறார்கள். இதற்கு ஆதரவு திரட்ட ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இந்த கலாசாரம் எப்போது வந்தது? மேற்கத்திய கலாசாரத்தை பரப்புவதற்காக, பொருட்களை விற்பதற்காக பரப்பப்படும் கவர்ச்சி. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை சீரழிக்கிறார்கள். இந்த கலாச்சாரம் வேண்டாம்.
நாங்கள் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்கிறார்களே ஆசிட் வீசி படுகொலை செய்யப்பட்ட வினோதினி பற்றி இவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?
பெண்கள் படித்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் வரட்டும். பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்யட்டும் என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications