பான் கார்டு இல்லாத எம்.பி, எம்.எல்.ஏக்கள்... வருமான வரி பிடித்தம் எவ்வளவு? விளக்கம் கேட்கும் ஹைகோர்ட

சென்னை உள்ளகரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் 11.40 லட்சம் ரூபாய்; எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும் 5.60 லட்சம் ரூபாய், ஆண்டு தோறும் சம்பளமாக பெறுகின்றனர். இவர்களுக்கான இந்த சம்பளத்திற்குரிய வருமான வரியை மத்திய அரசும் மாநில அரசும் பிடித்தமே செய்வதில்லை. 2006 -11ம் ஆண்டில் பதவி வகித்த எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனுக்களைப் பார்க்கும் போது, கிட்டத் தட்ட எட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு நிரந்தர கணக்கு எண்ணே இல்லை.
அதே சமயம் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பான் கார்ட் பெற்றிருந்தும் வருமானம் இல்லை என கூறியுள்ளனர். சில எம்.பி.,க்கள் குறைவான தொகையை வருமான வரியாக செலுத்தியுள்ளனர். இதுகுறித்து 2011ம் ஆண்டு வருமான வரித் துறைக்கு புகார் அனுப்பினேன்.
எனவே எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்களுக்கான சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்ய பார்லிமென்ட் விவகார அமைச்சக செயலர் மற்றும் சட்டசபை செயலருக்கு, உத்தரவிட வேண்டும்.
2006-12ம் ஆண்டில் வருமான வரி செலுத்த தவறிய எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் திருப்பி வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞருக்கும், சட்டசபை செயலருக்கான வழக்கறிஞருக்கும் உரிய நோட்டீஸ் வழங்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர் மணிகண்டன் வரதனுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.மேலும் விசாரணை, இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications