உடல் நலம் பாதிக்கப்பட்டு 2 பேர் மரணம்.. புழல் சிறையில் கைதிகள் போராட்டம்
சென்னை: சென்னை புழல் சிறையில் 2 கைதிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். இதையடுத்து மற்ற கைதிகள் அங்கு போராடட்த்தில் குதித்துள்ளனர்.
புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் 2 செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். சிறையில் உரிய மருத்துவ வசதிகள் கைதிகளுக்கு இல்லை என்று கூற அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தங்களைப் பார்க்க வந்த சிறைக் கண்காணிப்பாளர் கருப்பையாவிடமும் இப்புகாரை அவர்கள் தெரிவித்தனர்.
முறையான மருத்துவ வசதிகள், சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால், கடந்த சில நாட்களில் 2 கைதிகள் அங்கு மரணமடைந்துள்ளனராம். இதுதான் கைதிகளை போராட்டக் களத்தில் குதிக்கவைத்துள்ளதாம்.
கைதிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.
கைதிகள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிறப்பு காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications