சுதந்திர தமிழ் ஈழத்திற்கு மாற்று எதுவுமில்லை… வைகோ! ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்ட 500 பேர் கைது
சென்னை: சுதந்திர தமிழ்ஈழத்திற்கு மாற்று எதுவும் இல்லை என்று சென்னையில் ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். உலகத் தமிழர் பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் அடையாறில் உள்ள ஐ.நா.வின் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்.
இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பத்திரிகையாளர் ம.நடராசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதன் பின் பங்கேற்றிருந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் தொண்டர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந் நிலையில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் தலைமையில் சிலர் ஐ.நா. அலுவலகத்தை நோக்கி ஓடினர். போலீஸார் அவர்களைத் தடுத்து தள்ளிவிட்டனர்.செருப்பு மாலை
ராஜபட்சவின் முகமூடி அணிந்த ஒருவருக்குச் செருப்பு அணிவித்து கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் ஐ.நா.சபை அதிகாரி பான்கி மூன் உள்ளிட்ட 3 அதிகாரிகளின் படங்களை ஒரு தரப்பினர் தீயிட்டுக் கொளுத்தினர். இதனையடுத்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மாற்று எதுவும் இல்லை
முன்னதாக போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஐ.நா அதிகாரிகள் மீது விசாரணை, சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் எதுவும் கதைக்கு உதவாது. எனவே எங்கள் கோரிக்கை நியாயமானது. அனைத்துலக விசாரணை நடத்தவேண்டும். சிங்கள அரசு மீதும், கடமை தவறிய ஐ.நா அதிகாரிகள் மீதும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சுதந்திர தமிழ் ஈழத்திற்கு மாற்று எதுவுமில்லை. இதை வலியுறுத்திதான் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதாக கூறினார்.
இலங்கையில் தமிழினப் படுகொலையை தடுக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தீக்குளித்த முருகதாசனின் நினைவுநாள் செவ்வாய்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி அமெரிக்கா, பிரான்ஸ், உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐ.நா. அலுவலகளை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!













Click it and Unblock the Notifications