காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்த சீனர்கள்
சான் ஜோஸ்: காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர் சீன மக்கள்.
உலகெங்கிலும் உள்ள சீன மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த பாம்பு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் 10 நாட்கள் வரை நடக்கும். இந்நிலையில் காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்கள் பாம்பு புத்தாண்டை கொண்டாட ஒரு புதுமையான வழியை தேர்வு செய்தனர். அவர்கள் 1,345 கிலோ எடையுள்ள பிரைட் ரைஸ் செய்தனர். சான் ஜோஸில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சைனாடவுனில் நேற்று காலை 6 மணிக்கு 52 சமையல் கலைஞர்கள் கூடினர்.

அவர்கள் 735 கிலோ அரிசி, 200 கிலோ கோழிக்கறி, 120 கிலோ பன்றிக் கறி, 20 கிலோ சீன சாசேஜ், முட்டைகள், வெங்காயம் உள்ளிட்டவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பிரைட் ரைஸ் தயாரித்தனர்.
கின்னஸ் உலக சாதன அதிகாரிகள் வந்து பிரைட் ரைஸை எடை போட்டுப் பார்த்தனர். இதுவரை தயாரிக்கப்பட்ட பிரைட் ரைஸில் இங்கு தான் அதிக அளவில் தயார் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து இந்த பிரைட் ரைஸ் தயாரிப்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்களில் பெரும்பாலானோர் ஹோட்டல்கள் வைத்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications