10 வினோத கூகுள் விளையாட்டுக்கள், ட்ரை பண்ணுங்களேன்!!!
அலுவலகத்தில் தூங்கி வழிகிறீர்களா? உற்சாகமாக இருக்க கூகுளில் 10 வினோத விளையாட்டுக்கள் விளையாடுங்கள்.
அலுவலகத்தில் வேலை பார்த்து பார்த்து ஓய்ந்துவிட்டீர்களா இல்லை தூங்கி வழிகிறீர்களா? உங்களை உற்சாகப்படுத்தவே கூகுள் சில வினோத விளையாட்டுகளை வைத்துள்ளது. இல்லை இல்லை எங்கள் அலுவலகத்தில் கேம்ஸ் விளையாடினால் அவ்வளவு தான் என்று பயப்பட வேண்டாம். ஏனென்றால் கூகுளின் விளையாட்டை உங்கள் மேனேஜர் பார்த்தாலும் திட்டமாட்டார். மாறாக அவரும் விளையாடுவார்.
அடடா அப்படி என்ன விளையாட்டு என்று கேட்கிறீர்களா? நிறைய விளையாட்டுக்கள் உள்ளது அதில் 10 விளையாட்டுகளை உங்களுக்கு சொல்லித் தருகிறோம். இதோ...

முதல் விளையாட்டு
கூகுள் பக்கத்திற்கு சென்று தேடல் பெட்டியில் "do a barrel roll" என்று டைப் செய்lது பேக்ஸ்பேஸ் பட்டனை அழுத்தினால் அந்த பக்கம் வலப்புறமாக ஒரு சுற்றுசுற்றி வந்து நிற்கும்.

2வது விளையாட்டு
கூகுள் பக்கத்திற்கு சென்று அட்ரஸ் பாரில் elgoog.im என்று எழுதிப் பாருங்கள். திடீர் என்று எல்லாமே உல்டாவாகத் தெரியும்.

3வது விளையாட்டு
கூகுள் தேடல் பெட்டியில் Zerg Rush என்று டைப் செய்யுங்கள். உடனே நிறைய 'O' என்ற எழுத்துக்கள் வரும். அவற்றை நீங்கள் கிளிக் செய்து அழிக்காவிட்டால் அவை அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையுமே அழித்துவிடும்.

4வது விளையாட்டு
கூகுள் பக்கத்தில் நிறைய டூடுல்கள் வருகின்றன. இந்த டூடுல்களை தேர்வு செய்ய கூகுள் தனி குழுவையே அமைத்துள்ளது. கூகுள் பக்கத்திற்கு சென்று google doodles என்று டைப் செய்தால் இதுவரை கூகுளில் வந்த டூடுல்ஸ்களைப் பார்க்கலம். அல்லது www.google.co.in/doodles/ என்று அட்ரஸ் பாரிலும் டைப் செய்யலாம்.

5வது விளையாட்டு
ஏதாவது வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அதை கண்டுபிடிக்க பேர் உதவியாக உள்ளது கூகுகள் டிரான்ஸ்லேட். அதிலும் ஒரு விளையாட்டு உண்டு என்று தெரியுமா. உடனே கூகுள் டிரான்ஸ்லேட்டிற்கு http://www.translate.google.com/ சென்று அங்குள்ள ஃபிரம்(from) பட்டனை ஆங்கிலத்தில் மாற்றி தேடல் பெட்டியில் pv zk bschk zk kkkkkkk என்று பல முறை டைப் அல்லது காப்பி பேஸ்ட் செய்து ஆடியோ ஐகனை கிளிக் செய்து பாருங்கள் இசை கேட்கலாம்.

6வது விளையாட்டு
கூகுள் பக்கத்திற்கு சென்றால் கூகுள் என்ற வார்தைக்கு பதில் உங்கள் பெயர் வர வேண்டுமா? கூகுள் பக்கத்தில் funnygoogle என்று டைப் செய்து கிளிக் செய்யவும். அதன் பிறகு வரும் முதல் லிங்கை கிளிக் செய்க. அதில் உங்கள் பெயரைக் கேட்டு ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் பெயரை டைப் செய்து சப்மிட் பட்டனை அழுத்தவும். அதன் பிறகு வித்தையைப் பாருங்கள்.

7வது விளையாட்டு
கூகுள் இமேஜஸ் பக்கத்தில் completely wrong என்று டைப் செய்தால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற மிட் ரோம்னியின் படங்கள் வருகின்றன.

8வது விளையாட்டு
கூகுள் தேடல் பெட்டியில் Pig-Latin என்று டைப் செய்யுங்கள் தேடல் பக்கத்தில் 2வதாக உள்ள லிங்கை https://www.google.com/intl/xx-piglatin கிளிக் செய்து பார்த்தால் கூகுள் பக்கம் வேறு மொழியில் இருக்கும். இதே போன்று அந்த அட்ரஸ் பாரில் xx-klingon, xx-elmer ஆகிய வார்க்தைகளையும் முயற்சிக்கலாம்.

9வது விளையாட்டு
கூகுள் பக்கத்தில் anagram என்று டைப் செய்தால் do you mean nag a ram? என்று வரும். Recursion என்று டைப் செய்தால் do you mean recursion? என்று நம்மையே கூகுள் கலாய்க்கும்.

10வது விளையாட்டு
Fluffiest Kitten in the Whole Wide World என்று கூகுள் பக்கத்தில் டைப் செய்தால் மொஸு மொஸு என்று இருக்கும் வெள்ளைப் பூனையின் உருவம் வரும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications