மொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு
போர்ட் லூயிஸ்: மொரீஷியஸில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் நாட்டில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு தமிழுக்காக பாடுபட்ட சி. இலக்குவனாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சி. இலக்குவனார் தமிழ் பள்ளி மாரியம்மன் கோவில் தமிழ்ச் சங்கம் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட மொரீஷியஸ் வாழ் தமிழ் அறிஞரான அருணாசலம் புட்பரத்தினம் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், சி. இலக்குவனாரின் தமிழ் பணி மற்றும் அவருடைய சிறப்புகள் குறித்து விரிவாகக் கூறினார். பின்னர் பேசிய கேசவன் சொர்ணம், பள்ளிக்கு ஏன் இலக்குவனார் பெயர் வைக்கப்பட்டது என்பதையும், பெயர் பொருத்தத்தையும் பற்றி விளக்கினார்.
தொடர்ந்து பேசிய செமன், தமிழ் பள்ளியின் தேவை குறித்து விளக்கினார். மொரீஷியஸ் நாட்டு தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் மேனன் மருதை தமிழ் பள்ளி திறக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications