நாகை அருகே ஒரே வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை!
நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மாவட்டம் பூதனூர் என்ற இடத்தில் ஒரே வீட்டில் 120 பவுன் தங்க நகைகள், ரூ. 70,000 பணம் ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பூட்டிய வீடுகளில் திருடும் சம்பவங்களுக்கு என்றுமே குறைவில்லை. ஆனால் சமீப காலத்தில் இது தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. தங்கம் விற்கும் விலைக்கு நகைத் திருட்டு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் ஒரு பூட்டிய வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளையும், ரூ.70,000 பணத்தையும் திருடிச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் பொறையாறு அருகே பூதனூர் பகுதியில் வசித்து வருபவர் சம்சுதா. இவர் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications