முதியோர் உதவி தொகை-பார்வையிழந்த தம்பதியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு முதியோர் உதவி தொகை கேட்டு கடந்த 6 மாதங்களாக ஒரு பார்வையிழந்த தம்பதியை அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனராம்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மனைவி காளியம்மாள். இருவரும் பிறவியிலேயே கண் பார்வை இல்லாத மாற்று திறனாளிகள்.
இந்தத் தம்பதிக்கு பார்வதி என்ற மகளும், கருத்தப்பாண்டி என்ற மகளும் உள்ளனர். மகள் காதல் திருமணம் செய்து சென்று விட்டார். மகன் கூலி வேலை செய்து வருகிறார். உழைப்பிற்கு வழியில்லாத மாரிசாமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பித்து கடந்த ஒரு ஆண்டாக உதவி தொகை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மனைவி காளியம்மாளுக்கு உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தும் உதவி கிடைக்காமல் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் நடையாய் நடந்து வருகிறார் மாரிச்சாமி. ஆனால் எந்தப் பயனும் இல்லை.
இதையடுத்து மனு நீதி நாளில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தும் வருவாய் துறை அலுலர்களோ உதவி தொகை வழங்காமல் பார்வை இழந்த அவர்களை அலைக்கழிதது வருகின்றனர்.
இத்தனை தாமதத்திற்குக் காரணம், அதிகாரிகள் எதிர்பார்க்கும் கமிஷன் பணம்தான் அதாவது லஞ்சம்தான். இதுகுறித்து மாரிச்சாமி கூறும்போது எனக்கும், என் மனைவிக்கும் 100 சதவீதம் பார்வை இல்லை என டாக்டர்கள் சான்று வழங்கி உள்ளார்கள். உதவி தொகை கேட்டு கடந்த 6 மாதங்களாக அலைந்து வருகிறோம். ஆனால் ரூ.2 ஆயிரம் தந்தால் உதவி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என வருத்தத்துடன் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications