சிறுதாவூரில் இருந்து கோட்டைக்கு வரும் ஜெயலலிதா
சென்னை: போயஸ்கார்டன் வீட்டில் மராமத்து பணிகள் நடப்பதால் சிறுதாவூரில் இருந்து இப்போது கோட்டைக்கு வந்து செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவிற்கு, அடிக்கடி வந்து செல்வது வழக்கம். சசிகலா நீக்கத்திற்கு பிறகு, இரண்டு முறை வந்து சென்றுள்ளார். அப்போது, சில மணி நேரங்கள் இருந்துவிட்டு, சென்னை சென்றார்.
இப்போது போயஸ்கார்டன் வீட்டில் மராமத்து பணிகள் நடைபெறுகிறது இதனால் கவர்னர் உரை முடிந்த உடன் சிறுதாவூர் சென்று விட்டாராம்.
போயஸ்கார்டன் வீட்டில் பழைய கிரானைட் கற்களை எடுத்துவிட்டு புதிய கிரானைட் கற்களை பதித்து வருகின்றனர். புதிய மாடிப்படி கட்ட இருப்பதாகவும் அந்த பணிகள் முடிவடைய ஒருமாதம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. எனவே பட்ஜெட் விவாதங்கள் தொடங்கும் வரை சிறுதாவூரில் இருந்துதான் அவர் கோட்டைக்கு வந்து செல்வாராம்.
முதல்வர் சிறுதாவூர் வந்து செல்வதால், வழிநெடுகிலும் வீட்டு சுவரில், அ.தி.மு.கவினர் முதல்வர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். பங்களா அமைந்துள்ள பகுதியில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications