சென்னையில் இந்து ஆன்மீக சேவை கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஐந்தாவது இந்து ஆன்மீக, சேவை கண்காட்சியை பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை நடத்தும் இந்த கண்காட்சி, மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வரை 6 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி சுவாமி ஆசுதோஷானந்தர், தேனி சித்பவானந்த ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி ஓம்காரானந்தர், திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி, கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு இந்தக் கண்காட்சி அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதற்காக விவேகானந்தரின் திருவுருவச் சிலைகளுடன் கூடிய 10 ரதங்களின் யாத்திரை பிப்ரவரி 4 முதல் 16-ம் தேதி நடைபெற்றது.

400 பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த யாத்திரை சென்றபோது சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் விவேகானந்தரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். யாத்திரையின் நிறைவாக கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காலை 8 மணிக்கு மெரினா கடற்கரையில் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடை பயணம் நடைபெற்றது.

கண்காட்சி அரங்குகளுக்காக 1 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமான பந்தலும், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்த தனியாக அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கேன்டீன், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வயதினருக்கும் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியை முன்னிட்டு சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 400 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி தினமும் காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

மீனம்பாக்கம் பஸ் நிறுத்தத்திலிருந்து கண்காட்சி நடைபெறும் ஏ.எம். ஜெயின் கல்லூரிக்கு இலவச போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+