கனமழை: குற்றால அருவிகளில் பாயந்து வரும் தண்ணீர்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: நெல்லை மாவட்டத்தில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாத காரணத்தினால் மழையை நம்பி விதை விதைத்த விவசாயிகள் "வாடிய பயிரைக் கண்டு வாடினர்". இம்மாவட்டத்தில் வரட்சி தான்டவம் ஆடியது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

Heavy rain: Courtallam looks more lively
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையின் தாக்கம் நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இன்று அதிகாலை ஏற்பட்டது.

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியரை உள்ளிட்ட பகுதிகளில் லாரி மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி விளை நிலங்களுக்கு பாய்ச்சிய விவசாயிகளுக்கு இன்று பெய்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் வறண்டு கிடந்த குற்றால அருவிகளில் அதிகாலை முதலே தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டும் தகவல் அறிந்ததும் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதத் தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+