இனக் கொலையாளிகளுடன் இந்தியா ஏன் இன்னும் உறவைத் தொடர்கிறது: திருமாவளவன்

தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து ம்கூட ராஜிய உறவு என்ற பெயரில் இந்திய அரசு தொடர்ந்து இலங்கை இனப்படுகொலையாளிகளுக்கு ஆதரவளித்து வருவது தமிழ் மக்களைக் கேவலப்படுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறியும். அந்தக் கொடூரம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அந்த இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் அதிகாரத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது பார்ப்பவர்களை நெஞ்சம் பதறவைக்கும் புகைப்பட ஆதாரத்தை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேதகு பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் என்ற பாலகன் இலங்கை ராணுவத்தால் கைக்கெட்டும் தூரத்திலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பால்வடியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் பாலச்சந்திரன் ஒரு சில நிமிடங்களிலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்ததை அறிந்திருந்தும் தொடர்ந்து ராஜபக்சே கும்பலுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. சிங்கள இனவெறி ராணுவத்துக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது. போர்க்குற்றவாளிகளான ராஜபக்சேவுக்கும், கொத்தபாயாவுக்கும் இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட ராஜிய உறவு என்ற பெயரில் இந்திய அரசு தொடர்ந்து இலங்கை இனப்படுகொலையாளிகளுக்கு ஆதரவளித்து வருவது தமிழ் மக்களைக் கேவலப்படுத்தும் செயலாகும். பாலச்சந்திரன் படுகொலையைப்போல இன்னும் எத்தனை ஆதாரங்கள் வெளிவரப்போகின்றனவோ தெரியவில்லை.
இவ்வளவுக்குப் பிறகும் இந்தியா வாய்மூடி மௌனம் காப்பது முறையல்ல. இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் ஒன்றை முன்மொழிய வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை விசாரிக்க சுயேச்சையான சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா அவையின் மேற்பார்வையில் நடத்துவதற்கு இந்திய அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?











Click it and Unblock the Notifications