டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையை தொடங்குகிறது மலேசியாவின் ஏர் ஏசியா!

விமான சேவை துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ், மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க முனைப்பு காட்டின.
அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்தது. இருப்பினும் இரு நிறுவனங்களிடையே பங்கு பரிமாற்றத்தில் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனமும் டாடா குழுமமும் இணைந்து இந்தியாவில் விமான சேவையை தொடங்க முடிவு செய்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டின் நான்காம் காலாண்டில் இந்த விமான சேவைகள் தொடங்கப்படக் கூடும். இதற்காக இந்தியாவில் சுமார் 30 முதல் 50 மில்லியன் டாலர் அல்லது ரூ250 கோடியை முதலில் முதலீடு செய்கிறது ஏர் ஏசியா.
மேலும் ஏர் ஏசியா நிறுவனம் 49% பங்குகளையும் டாடா சன்ஸ் குழுமம் 30% பங்குகளையும் தங்கள் வசம் வைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் விமான சேவையை இயக்கத்தில் டாடா குழுமம் எந்த ஒரு பங்கையும் வகிக்காது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏர் ஏசியாவின் தலைவர் டோனி பெர்னான்டஸ், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெருமிதப்பட்டார்.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் பங்குகள் சரிவை சந்தித்தன. ஏனெனில் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனமானது ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகளை வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்துடன் ஏர் ஏசியா இணைவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகள் சரிவை சந்தித்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications