எதற்காக ராஜஸ்தான் மக்கள் வசுந்தரா ராஜேவுக்காக காத்திருக்கிறார்கள்?

Subscribe to Oneindia Tamil

Vasundhara Raje
- சூர்யகாந்த் சர்மா

ஜெய்பூர்: முன்னாள் முதல்வரும் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அம்மாநில மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜ்நாத் சிங் பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை அம்மாநில பாஜக தலைவராக்கியது. ராஜ்நாத் சிங் எடுத்த முடிவுகளில் இது மிகவும் நல்ல முடிவு என்று கூறுவேன். இந்த ஆண்டு நடக்கும் விதான் சபா தேர்தல் மற்றும் 2014ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தானில் உள்ள பாஜக தலைவர்களிலேயே மிகவும் வெற்றிகரமானவர் என்றால் அது வசுந்தரா ராஜே தான். அவரது தலைமையில் கடந்த 2003ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது தான் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 120 தொகுதிகளை கைப்பற்றியது.

அதற்கு முந்தைய தேர்தல்களிலும் சரி, பின்னர் நடந்த தேர்தல்களிலும் சரி ராஜஸ்தானில் பாஜக இத்தனை இடங்களை கைப்பற்றவில்லை.

தற்போதுள்ள அசோக் கெலாட் அரசின் முறைகேடுகளைப் பற்றி எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட போதாது. ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு ஊழலுக்கு பெயர்போனது.

அசோக் கெலாட்டின் குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ரூ.11,000 கோடி மதிப்புள்ள அரசு புராஜெக்ட்கள் அளிக்கப்பட்டது என்று ஏப்ரல் 2011 செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. அவரது உறவினர்களுக்கு மும்பையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்தாரின் நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வகையில் கெலாட் பல முடிவுகள் எடுத்துள்ளார்.

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் சொத்து குவிப்பு வெளிவந்த போது அவருக்கு உதவியது கெலாட் அரசு தான்.

கெலாட் அரசின் முறைகேடுகளை ராஜி தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். கெலாட்டின் ஊழல் அரசுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் பெண்கள், தலித் மக்கள் என்று யாருமே பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. அதே சமயம் அனைத்து தரப்பினர் இடையேயும் ராஜே மிகவும் பிரபலமாக உள்ளார். அவர் பாமர மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கின்றார்.

பெண்கள், தலித் மக்கள் மற்றும் ராஜஸ்தானில் உள்ள சிறுபான்மையின சமூகத்தினருடன் ராஜேவுக்கு நல்ல உறவு உள்ளது. நர்ஸ் பன்வாரி தேவி வழக்கோடு ராஜஸ்தான் அரசு மீது பெண்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. கெலாட் அரசோ குற்றவாளிகளை பாதுகாப்பதில் குறியாக இருந்தது.

ராஜஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் கெலாட் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும், வசுந்தரா ராஜேவின் அரசில் தான் பாதுகாப்பாக இருந்ததாகவும் ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

வேலையில்லா திண்டாட்டம், மக்கள் விரோத கொள்கைகள், விலைவாசி உயர்வால் இளைஞர்கள் கெலாட் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். வசுந்தரா ராஜே முதல்வராக வர வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகின்றனர்.

கெலாட் ராஜஸ்தானில் முறையாக நிர்வாகம் செய்யாமல் இருக்க வசுந்தரா ராஜேவோ லண்டன் சென்று அங்குள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் காலநிலை மாற்றம் குறித்து படித்துவிட்டு வந்தார்.

ராஜஸ்தான் மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு வெளிச்சம் வராதா என்று ஏங்குகின்றனர். அந்த வெளிச்சம் தங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லாதா, பெண்களின் கண்ணியத்தை காக்காதா, வேலைவாய்ப்புகளை உருவாக்காதா என்று எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+