வேலூர் அருகே மனைவியை நாட்டு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்
வேலூர்: வேலூர் அருகே விடுப்பில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வேப்பங்குளம் அருகே உள்ளது கொட்டாவூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(45). அவரது மனைவி வினிதா(35). ராணுவ வீரரான திருநாவுக்கரசு விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று காலை அவர் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் இருந்து வெளிப்பட்ட குண்டு வினிதா மீது பாய்ந்தது. இதில் வினிதா நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே திருநாவுக்கரசு வேப்பங்குளம் காவல் நிலையத்திற்கு சென்று தான் பறவை சுடுகையில் தனது மனைவி மீது குண்டு பாயந்துவிட்டது என்றார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினிதாவை வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருநாவுக்கரசுக்கு நாட்டு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது, அவர் ஏன் திடீர் என்று சுட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications