டெல்லியில் 15 வயது சிறுமியை கற்பழித்து, விபச்சாரத்தில் தள்ளிய உறவுக்காரர்
டெல்லி: 15 வயது சிறுமியை தனது உறவுக்காரர் என்றும் பார்க்காமல் கற்பழித்து அவரை விபச்சாரத்தில் தள்ளிய நபர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ். டெல்லியில் வசிக்கும் அவர் கடந்த 2010ம் ஆண்டு தனது உறவுக்கார சிறுமியை(15 வயது) தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அவர் அந்த சிறுமியை பல முறை கற்பழித்ததுடன் அவரை பலருக்கு விருந்தாக்கியுள்ளார். அவரை சீரழித்தவர்களிடம் பங்கஜ் பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஒருவர் அந்த சிறுமியை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு மீண்டும் அவரை வீட்டில் வந்து விட்டுள்ளார். காரில் இருந்து இறங்கிய சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறினார். இதையடுத்து போலீசார் சிறுமியை நிர்மல் சாயா என்ற காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பங்கஜை கைது செய்தனர். ஆனால் அவரோ அந்த சிறுமி யார் என்றே தெரியாது என்று சாதித்தார். இந்நிலையில் இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காப்பக அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறுகையில், அந்த சிறுமி தன்னை தன் உறவுக்காரரே கற்பழித்து பிறருக்கும் விருந்தாக்கியதாக கூறினார். இதனால் அவர் கர்ப்பம் அடைந்தார். அவரது கோரிக்கையின்பேரில் அவருக்கு அரசு மருத்துவமனையில் கருகலைப்பு செய்யப்பட்டது என்றனர்.
பங்கஜ் மீதான குற்றம் உறுதியாகிவிட்டது விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications