அக்காவை பழிவாங்க 12 வயது தங்கை கற்பழிப்பு: ஒருவருக்கு ஆயுள், மற்றொருவருக்கு 10 ஆண்டு சிறை
டெல்லி: அக்காவை பழிவாங்க 12 வயது தங்கையை கற்பழித்த 2 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மனோஜ். அவர் ஒரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அப்போது அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டடுள்ளது. அப்போதெல்லாம் அப்பெண் தனது தோழியுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து வந்துள்ளார். காவல் நிலையத்தில் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த தனது காதலியின் தோழிக்கு பாடம் கற்பிக்க நினைத்தார் மனோஜ்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மாலை அவர் காதலியின் தோழியைத் தேடிச் சென்றார். ஆனால் அப்போது அவரின் 12 வயது தங்கை மார்க்கெட்டுக்கு செல்வதைப் பார்த்து அவரிடம் உன் அக்கா எங்கே என்று கேட்டுள்ளார். அக்கா வீட்டில் இருப்பதாக சிறுமி தெரிவித்துள்ளார். அப்போது மனோஜின் நண்பர் அமித் அங்கு காரில் வந்துள்ளார். உடனே மனோஜ் சிறுமியை காரில் கடத்திச் சென்று கற்பழித்தார். அதன் பிறகு அமித் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு மங்கோல்புரி பகுதியில் இறக்கிவிட்டார்.
சிறுமியைக் காணாமல் அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். மனோஜ் போலீசாருக்கு தகவல் கொடுப்பவர் என்பதால் போலீசார் அவரிடமே சிறுமியின் இடத்தை கண்டுபிடிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியின் அக்கா போன் செய்தபோது அவர் தான் இருக்கும் இடத்தை தெரிவித்தார். அதன் பிறகு நடந்தவற்றை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனோஜ் மற்றும் அமித் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி காமினி மனோஜுக்கு ஆயுள் தண்டனையும், அமித்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications