டீயில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்தார் தலைமை ஆசிரியர்... வால்பாறை ஆசிரியை புகார்
வால்பாறை: டீயில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து விட்டு, பின்னர் அதை வீடியோவில் பதிவு செய்து அதைக் காட்டி என்னை மிரட்டி உறவு கொண்டார் தலைமை ஆசிரியர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய வால்பாறை தலைமை ஆசிரியை போலீஸில் புகார் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் உதயன். இந்த பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்த ஆசிரியையுடன், தலைமை ஆசிரியர் நெருக்கமான கோலத்தில் இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாயின.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி சோலையார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமைஆசிரியர் உதயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை வால்பாறை போலீசார் கல்வித்துறை நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பேரில் கடந்த மாதம் 22-ந்தேதி இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தில் இருந்த தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோரை கல்வித் துறை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் அந்த ஆபாசப் படங்கள் வீடியோ வடிவில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு பின்னர் அடங்கியது. இந்த நிலையில், அந்த ஆபாச படத்தில் உள்ள ஆசிரியை, வால்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். அவர் கோவை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
அதில், தலைமையாசிரியர் உதயன் சோலையார் பள்ளியில் நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது சிறப்பு வகுப்பு இருப்பதாக வரச்சொல்லி எனக்கு டீ கொடுத்தார். அந்த டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னுடன் ஆபாசமாக இருப்பது போன்று படம் எடுத்துக்கொண்டார். அந்த படத்தை வைத்துக் கொண்டு என்னை மிரட்டி, உடலுறவு கொண்டார். மேலும் அந்த படத்தை வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டினார் என்று கூறியுள்ளார்.
இதன் பேரில் போலீஸார் தற்போது 4 பிரிவுகளின் கீழ் உதயன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உதயன் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications