அம்மா பிறந்தநாள் காவடி, பால்குடம் வருது: ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத போலீசார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் போலீசார் ஆம்புலன்ஸுக்கு வழிவிடவில்லை.
முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாளை அதிமுகவினர் நேற்று சிறப்பாக கொண்டாடினர். அவரின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவில் வளாகத்தில் கூடிய அதிமுகவினர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். அதன் பிறகு முளைப்பாரி, பால்குடம், காவடி எடுத்து அவர்கள் திருவப்புர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சாலை முழுவதும் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தெளிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அவசர சிகிச்சைக்காக ஒரு நோயாளியை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வந்தது.
அதை வழிமறித்த போலீசார் இந்த வழியில் காவடி, முளைப்பாரி, பால்குடம் எடுத்து வருகின்றனர் அதனால் வேறு வழியாக செல்லவும் என்றனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வேறு வழியாக சுற்றிச் சென்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications