கைதட்டாத விவசாயிகளை உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்று தூற்றிய அமைச்சர்
தஞ்சாவூர்: பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயி்கள் கைதட்டாமல் அமர்ந்திருந்ததால், அவர்களைப் பார்த்து கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்றும் மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் திட்டியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கலந்து கொண்டார். விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். அப்போது விவசாயிகள் கைதட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் அமைச்சர் கோபமடைந்தார்.
விவசாயிகளைப் பார்த்து கோபமாக பேசியபடி கைதட்டுமாறு கூறினாராம். மேலும் விவசாயிகளை உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்றும் அவர் வர்ணித்ததாக தெரிகிறது.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதுகுறித்து வேதனை தெரிவித்த விவசாயிகள், மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை மறந்து ஏதோ தனது சொந்த பணத்தை தருவது போல் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியிருப்பது மிக மோசமான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications