தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் பதவியேற்றார்
சியோல்: தென்கொரியா நாட்டின் முதலாவது பெண் அதிபராக பார்க் கியூன் ஹே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்கொரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே போட்டியிட்டார். அவரை எதிர்த்து கியூன் ஹே களம் இறங்கினார். இத்தேர்தலில் மூன் ஜே தோல்வியைத் தழுவ கியூன் ஹே சரித்திரம் படைத்தார்.
தென்கொரிய நாட்டின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை கியூன் ஹே பெற்றார். இதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் கியூன்ஹே பதவி ஏற்றார்.
பல லட்சம் பேர் கூடியிருந்த விழாவில் அவர் பேசுகையில், நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டேன். வடகொரியா நடத்தியுள்ள அணுகுண்டு சோதனை தென்கொரியாவின் எதிர்காலத்துக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் விடுவிக்கப்பட்ட சவாலாக உள்ளது. இந்த சவாலுக்கு வடகொரியாவே இரையாகும் சூழ்நிலை உருவாகி விடும் என்று எச்சரித்து உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications